தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு

 வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு

 வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : பிப் 21, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி அருகே குரங்கணி, கொட்டகுடி வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத் தீ, வனப்பாதுகாப்பு குறித்த கோடைகால பயிற்சி விழிப்புணர்வு முகாம் வனச்சரக அலுவலர் நாகராஜ் தலைமையில் நடந்தது.

வனவர்கள் அன்பரசு, நாகராஜ், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். வனப் பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் காட்டுத் தீ பரவுவதை தடுப்பது குறித்தும், தனி நபர்கள் தீ வைப்பதால் வன விலங்குகள், இயற்கை அழிவு ஏற்படுவது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. காட்டுத் தீ ஏற்படுவதை கண்டவுடன் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், அனுமதி பெற்று மலையேற்றம் செல்வோர் தீ வைக்கும் சம்பவத்தில் ஈடுபட கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொது மக்களிடம் வனத்துறையினர் வழங்கினர். முகாமில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி, 7வது, 10வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us