/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மன்றம் துவக்கம்
/
பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மன்றம் துவக்கம்
ADDED : அக் 07, 2025 07:48 AM

ஆண்டிபட்டி : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் தலைமை ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றத்தை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பா.ஜ.,வினர் துவக்கி உள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பா.ஜ.,வினர் இந்த மன்றத்தை துவக்கி பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இம் மன்றத்தில் உறுப்பினராக சேர அழைப்பும் விடுத்துள்ளனர். போஸ்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் மக்கள் தலைவர் அண்ணாமலை தலைமை ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி நகர பா.ஜ., நிர்வாகி நாகேந்திரன் கூறுகையில், 'அண்ணாமலை மீது உள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றம் துவக்கி உள்ளோம்,' என்றார்.