UPDATED : ஜூன் 03, 2026 09:35 PM
ADDED : ஜூன் 03, 2026 09:33 PM
மூணாறு:லஞ்ச வழக்கில் நீதிமன்ற உத்தரவில் தண்டனை அனுபவிக்காமல் போக்கு காட்டிய தேவிகுளம் முன்னாள் பி.டி.ஓ., அஜய்குமாரை விஜிலன்ஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அமரவிளா அஜய்குமார் 68. தேவிகுளம் பி.டி.ஓ., பணிபுரிந்த போது 2013ல் பூப்பாறையை சோந்தவரிடம் வீடு கட்டும் திட்டத்தில் இறுதி நிதியை வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது இடுக்கி விஜிலன்ஸ் போலீசார் கைது செய்தனர். இந்த மூவாற்றுபுழா விஜிலன்ஸ் நீதிமன்றம் அஜய்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து 2017 ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தையும் அஜய்குமார் அணுகியும் பயனில்லை. அதன்பிறகு தண்டனை அனுபவிக்காமலும், நீதிமன்றத்தில் ஆஜராகமாலும் தலைமறைவாக இருந்தார். இடுக்கி விஜிலன்ஸ் போலீசார் திருவனந்தபுரத்தில் அஜய்குமாரை கைது செய்து மூவாற்றுபுழா விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.தொடர்ந்து விய்யூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
