ADDED : பிப் 26, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
தேனி: ரயில்வேயில் குரூப் டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ., படித்தவர்கள் மார்ச்2க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தேர்விற்கு விண்ணப்பித்து விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். பங்கேற்போர் புகைப்படம், சுயவிவர குறிப்பு வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
