/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூச்சிகளை கட்டுப்படுத்த நாற்றுகள் இலவசம்
/
பூச்சிகளை கட்டுப்படுத்த நாற்றுகள் இலவசம்
ADDED : நவ 22, 2025 03:37 AM
போடி: பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு பூச்சி விரட்டியாக வேம்பு, நொச்சி நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது என போடி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
தோட்டங்களில் தீமை செய்யும் பூச்சிகளால் பயிர்களின் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தி அழிப்பதற்கு பூச்சி விரட்டியாக வேம்பு, நொச்சி பயன்படுகிறது. இதனை தோட்டத்தின் கரை ஓரங்களில் வளர்ப்பதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டி கட்டுப்படுத்தலாம். வேம்பு, நொச்சி நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 நாற்றுகள் இலவசமாக வழங்கப் படுகிறது.
வேம்பு, நொச்சி நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோவுடன் போடி வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

