ADDED : மார் 11, 2024 06:54 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி,ஆராய்ச்சி நிலையத்தில் பழ அறிவியல் துறையில் அகில இந்திய ஒருங்கிணைந்தபழ ஆராய்ச்சி திட்டத்தில் எஸ்.சி., விவசாயிகளுக்கான பயிற்சி, இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜங்கம் தலைமை வகித்து பேசுகையில்: வேளாண் தொழில் நுட்பக்கள், அறுவடைக்கு பின் செய் தொழில்நுட்பங்கள், அடர் நடவு முறை, மண் பாதிப்புகள் மற்றும் மதிப்பிடப்பட்ட பொருட்கள், வியாபார ரீதியில் பழப்பயிர்களின் பங்கு, அடர் நடவு முறையில் சாகுபடி செய்தால்அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, பேராசிரியர்கள் சரஸ்வதி, முத்துலட்சுமி, சுந்தரய்யா, முத்தையா உட்படஏராளமானோர்பங்கேற்றனர். விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
