ADDED : செப் 19, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. துவக்க விழாவிற்கு தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தலைமை வகித்தார்.
ஊர்காவல்படை ஐ.ஜி., ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். போட்டிகளை கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். எஸ்.பி., பிரவீன் கவுதம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 12 மண்டலங்களைச் சேர்ந்த ஊர்காவல்படை வீரர்கள் பல்வேறு வகையான போட்டிகளை பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மண்டல நிர்வாகி அஜய்கார்த்திக் ராஜா தலைமையில் போட்டிகளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
