தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

 விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

 விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்


ADDED : செப் 15, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி: மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்தும், அருகம்புல் மாலை அணிவித்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

போடி புதூர் சங்கர விநாயகர் கோயி லில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குலாலர்பாளையம் விநாயகர் கோயில், அணைப்பிள்ளையார் கோயில், சந்தைப்பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹாரம் விநாயகர் கோயில், அமராவதி நகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். போடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணி சார்பில் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

தேனி: பெத்தாட்சி விநாயகர், சாலை பிள்ளையார் கோயில், கோவிந்தநகரம் செல்வ விநாயகர் கோயில், மெய்கண்ட இரட்டை விநாயகர் கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்தனம், விபூதி அலங்காரங்களில் சுவாமி காட்சியளித்தார். ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப் பட்டன.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாலவிநாயகர், அரச மரத்து விநாயகர், சக்கம்பட்டி கல்கோயில், காசி விநாயகர், மேல விநாயகர், மங்கள விநாயகர், மேடை விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்து வழிபட்டனர். சீனிவாசா நகரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜ., நகர் தலைவர் மனோஜ் குமார், ஹிந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம், வழக்கறிஞர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூணாறு: சுப்பிரமணிய சுவாமி, சக்தி விநாயகர் ஆகிய கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி சார்பில் 14 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிலைகள் செப்.20ல் மூணாறுசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு சென்று கன்னியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ரமேஷ், பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் கந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் பாலு ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us