ADDED : செப் 14, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.15–
தேனி அல்லிநகரத்தில் உள்ள ஹிந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து விநாயகர் சிலையுடன் ஊர்வலத்தை துவங்கினர்.
கட்சியின் தொண்டரணி மாநில துணை தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட நிர்வாகி கார்த்தி முன்னிலை வகித்தார். தேனி–பெரியகுளம் மெயின் ரோட்டிற்கு வந்த போது அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதி பெறாமல் ஊர்வலம் செல்ல கூடாது என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப்பின் போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.
