UPDATED : செப் 24, 2026 03:22 PM
ADDED : செப் 24, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட், மானிலை பகுதியைச் சேர்ந்தவர் பென்னியேசுதாஸ் 20.
இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மூணாறு டி. எஸ். பி. அமிர்தாசதீபனின் கீழ் செயல்படும் நிழல் போலீசாரின் உதவியுடன் தேவிகுளம் இன்ஸ்பெக்டர் கவிராஜன் தலைமையில் போலீசார் பென்னியேசுதாஸ் வீட்டில் சோதனையிட்டனர். வீட்டில் இருந்து 1 கிலோ கஞ்சா கைப்பற்றிய போலீசார் பென்னியேசுதாஸை கைது செய்தனர்.
