ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர், ரங்கசமுத்திரம் பகுதிகளில் வைகை அணை போலீசார ரோந்து சென்றனர். ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 30 கிராம் 4 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.
விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் 23, என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
வைகை அணை போலீசார் விக்னேஷை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தியவர் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பிரிவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி 21. தேவதானப்பட்டி சுடுகாட்டு பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அந்தப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, மருதுபாண்டி டூவீலரை சோதனையிட்டார்.
பெட்ரோல் டேங்க் கவரில் 20 கிராம் கஞ்சா வைத்திருந்தார். மருதுபாண்டியை கைது செய்து, கஞ்சா, டூவீலரை கைப்பற்றினார்.-
தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., போத்திராஜ் தலைமையிலான போலீசார் கண்டமனுார் வருஷநாடு ரோடு தனியார் பட்டறை கடை முன் ரோந்து சென்றனர்.
அப்போது பெரியகுளம் வடகரை வரதப்பர் தெரு வேலுச்சாமி 43, ரூ.1000 மதிப்புள்ள கஞ்சாவை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்த கஞ்சாவை கைப்பற்றினர்.