UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: வைகை அணை புது பாலத்தின் இருபுறமும் சேகரமாகும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி - பெரியகுளம் ரோட்டில் வைகை அணையில் ஆற்றின் குறுக்கே இருந்த குறுகலான பழைய பாலம் அருகே அகலமான புதிய பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இரு பாலங்களும் பயன்பாட்டில் உள்ளன. புதிய பாலத்தில் நடைபாதைக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் இருபுறமும் நடைபாதையிலும் அதிகமான அளவில் குப்பை படிந்து வருகிறது. மழைக்காலத்தில் மழை நீருடன் குப்பை சேர்ந்து சுகாதாரப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. பாலத்தில் சேரும் குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
