தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குப்பையை ரோட்டில் கொட்டுவதால் அவதி

குப்பையை ரோட்டில் கொட்டுவதால் அவதி

குப்பையை ரோட்டில் கொட்டுவதால் அவதி


ADDED : ஆக 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம் ஆக. 23

தோட்டங்களுக்கு செல்லும் ரோட்டில் புதுப்பட்டி பேரூராட்சி குப்பை கொட்டுவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை ஊருக்கு வடக்கு பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு அருகில் குப்பை கிடங்கு அமைத்துள்ளனர். ஒரே இடத்தில் அனுமந்தன்பட்டி,புதுப்பட்டி பேரூராட்சிகளுக்கு குப்பை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டிலுமே குப்பை நிரம்பி வழிகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகள் இரு கிடங்குகளிலும் மேற்கொள்ளவில்லை. எனவே தினமும் சேகரமாகும் குப்பையை என்ன செய்வதென்று தெரியாமல் புதுப்பட்டி பேரூராட்சி திணறுகிறது. ேறு வழியே இல்லாததால், விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல பயன்படுத்தும் ரோட்டின் இரண்டு பக்கமும் கொட்டி வருகின்றனர். தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளும், தொழிலாளர்களும் மூக்கை பொத்தி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. குப்பையை முறைப்படி கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராட்சை விவசாயிகள் முகுந்தன், கிருஷ்ணதேவன் ஆகியோர் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us