ADDED : செப் 29, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
தேனி, செப். 30–மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குப்பை கொட்டிய இடங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது என ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
இத் துறையினர் கூறியதாவதுஒ; மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை 130 ஊராட்சிகளில் குப்பை கொட்டும் இடங்கள் என 765 என கண்டறியப்பட்டன. அவற்றை குறைக்க திட்டமிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு சில குப்பை கொட்டும் இடங்களை பூங்காங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. குப்பை முழுமையாக அகற்றி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதனால் தற்போது குப்பை கொட்டும் இடம் 300 என குறைந்துள்ளது. இது தவிர ஊராட்சிகளுக்கு உட்பட்டமாநில, தேசிய நெடுஞ்சாலை ஓரம் குவிந்துள்ள குப்பையை வெள்ளிதோறும் அகற்றி வருகிறோம். குப்பை பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றனர்.
