/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனூர் நகராட்சியில் குப்பையால் சுகாதாரக்கேடு
/
சின்னமனூர் நகராட்சியில் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : நவ 02, 2025 06:07 AM
சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். நகராட்சியில் புதிய துப்புரவு பணியாளர்கள் நியமனம் இன்றி காலிப் பணியிடம் அதிகம் உள்ளது. எனவே துப்புரவு பணிகளை தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்த நிறுவனம் குப்பை அகற்றுவதில் காட்டும் அலட்சியத்தால் பெருமளவில் குப்பை தேங்கியுள்ளது.
வஉ.சி. குறுக்கு வீதிகள், சிவசக்தி நகர், அழகர்சாமி நகர், காந்தி நகர் காலனி, குறிப்பாக எட்டாவது தெருவில் துர்நாற்றம் வீசுகிறது.
இதே போன்று நகரின் அனைத்து பகுதி களிலும் குப்பை அகற்றும் பணியில் சுணக்கம் உள்ளது.
கமிஷனர் தலையிட்டு குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.

