sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெள்ளைப்பூண்டு விலை குறைவு

/

வெள்ளைப்பூண்டு விலை குறைவு

வெள்ளைப்பூண்டு விலை குறைவு

வெள்ளைப்பூண்டு விலை குறைவு


ADDED : மார் 05, 2024 04:14 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : கடந்த மாதம் கிலோ ரூ.600க்கு விற்ற வெள்ளைப்பூண்டு யாரும் எதிர்பாராத வகையில் கிலோ ரூ.150 முதல் ரூ.200 விலையில் கிடைக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமையலில் வெள்ளைப்பூண்டு இன்றியமையாத பொருளாக உள்ளது. பூண்டு மலைப் பிரதேசங்களில் அதிகம் சாகுபடியாகிறது. இந்தியாவில் மத்தியப்பிரதேசம், பீஹார், ஹரியானா, பஞ்சாப், உத்ரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், தாண்டிகுடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகிறது.

மாவட்டத்தில் வடுகபட்டியில் வாரம் இருநாட்கள் நடைபெறும் சந்தையிலிருந்து வெள்ளைப் பூண்டு மாநிலம் முழுவதும் செல்கிறது. வெள்ளைப்பூண்டு கடந்த மாதம் கிலோ ரூ.500 முதல் 600 வரை இருந்த விலை, இம் மாதம் தற்போது கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்கிறது. இந்த விலை குறைவு குறித்து கம்பம் வர்த்தக சங்க தலைவர் முருகன் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக வரத்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பூண்டு அறுவடை துவங்கியதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ தற்போது ரூ.150 முதல் ரூ.200 விலை உள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை குறைவு என்றார். இதனால் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us