ADDED : செப் 20, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.21–
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான பணித்திறன், விளையாட்டு போட்டிகள் செப்.,18 முதல் 20 வரை நடந்தது.
12 சரகங்களை சேர்ந்த சுமார் 1400 வீரர்கள் வாலிபால், கயிறு இழுத்தல், ரிலே, ஓட்டப்பந்தயம் கபடி போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளில் சென்னை அணி முதலிடமும், வேலுார் அணி 2வது இடமும் வென்றன. பணித்திறன் போட்டிகளில் திண்டுக்கல், சேலம் அணிகள் முதலிடமும், திருநெல்வேலி அணி 2ம் இடமும் வென்றன. வெற்றிபெற்றி அணிகளுக்கு ஊர்க்காவல் படை பிரிவு ஐ.ஜி., ஜெயஸ்ரீ பரிசு வழங்கினார். இதில் ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி., விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். போட்டிகளை திண்டுக்கல் மண்டல நிர்வாகி அஜய் கார்த்திக் ராஜா ஒருங்கிணைத்தார்.
