ADDED : மார் 18, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டி நாகா சிட்டியை சேர்ந்தவர் சிவகுமார். பெயிண்டிங் காண்ட்ராக்டர். இவரது வீட்டிற்குள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து 14 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.
இதில் தேனியை சேர்ந்த பிரவீன் குமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அருண் குமாரை 26 எஸ்.ஐ., இளங்குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றன.
