ADDED : ஆக 26, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் மாணவர்களுக்கான 42 வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. உப தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சொரூபன், சிவப்பிரகாசம், ராதாகிருஷ்ணன், ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஞானவேல் முன்னிலை வகித்தனர்.
போடி சி.பி.ஏ., கல்லூரியில் படித்த பல்வேறு துறைகளைச் சார்ந்த 360 மாணவ, மாணவிகளுக்கு தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., பட்டம் வழங்கி பேசும் போது : மாணவர்கள் கல்வி கற்பதுடன், சவால்களை எதிர் கொள்ள வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.