நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கோட்டூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல் பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் தனசேகரன் தலைமையில் நடந்தது. மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இயக்குநர் கலைச்செல்வி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், 'மாணவர்கள் தங்கள் தனித்திறனை கண்டறிந்து அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள்ளுல்கள்,'என்றார். பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை பயின்ற 190 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

