ADDED : மார் 26, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா, 208 இளநிலை, முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அவர் பேசுகையில்,' என்ன படித்தோம் என்று இருக்காமல் என்னவாக போகிறோம், சேமிப்பின் முக்கியம், உணர்வு சார் நுண்ணுறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நேர மேலாண்மையின் முக்கியத்துவம் உணர்ந்து படிக்க வேண்டும்',என்றார் துறைத்தலைவர் சுல்தான் இப்ராகீம், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
