/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து பாட்டி, மகள் காயம்
/
வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து பாட்டி, மகள் காயம்
ADDED : டிச 28, 2025 05:43 AM
பெரியகுளம்: லட்சுமிபுரம் வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பாட்டி, மகள், பேத்தி மூவர் காயமடைந்தனர்.
பெரியகுளம் தென்கரை ஜே.ஆர்.ஆர்., நகரைச் சேர்ந்த ராமராஜ் மனைவி மாரியம்மாள் 63. ஓய்வு பெற்றஅரசு ஊழியர். கோவையில் உள்ள மகள் சரண்யா பெரியகுளத்தில் உடல் நலம் சரியில்லாத கணவர் ராமராஜை பார்க்க வந்துள்ளார். தேனிக்கு ஆட்டோவில் சென்றனர். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த அழகுராஜா 35. ஆட்டோவை ஓட்டினார். லட்சுமிபுரம் தனியார் பள்ளி அருகே வேகத்தடையில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது.இதில் மாரியம்மாள், இவரது மகள் சரண்யா 30. பேத்தி சுபிக் ஷா காயமடைந்தனர். கோவை தனியார் மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய அழகுராஜாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

