ADDED : பிப் 20, 2025 05:56 AM
தேனி: தேனி வலையபட்டி அருகே குஞ்சுமூப்பர் கண்மாயை தி லிட்டில் கிங்டம் பள்ளிக்கு அரசு வழங்கிய பசுமை விருது நிதியுடன் மாணவர்களின் பெற்றோர், தன்னார்வலர்கள் சேர்ந்து துார்வாரப்பட்டது.
துார்வாரும் பணி நிறைவடைந்த கண்மாயில் மாணவர்கள், ஆசிரியர்கள் வழிபாடு நடத்தினர். பள்ளி முதல்வர் சுஜாதா கூறுகையில், கடந்தாண்டு மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் பிராஜக்ட் மூலம் பூதிப்புரம் அருகே உள்ள குப்பாயூரணி கண்மாய் துார்வாரப்பட்டது. அதன்மூலம் பல விவசாய நிலங்கள் பலனடைகின்றன. அந்த குளத்தை துார்வாரியதற்காக அரசு சார்பில் பசுமை விருது, பரிசுத்தொகை ரூ.ஒரு லட்சம் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பெற்றோர், தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் வலையபட்டி அருகே 24ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள குஞ்சுமூப்பர் கண்மாய் துார்வாரப்பட்டது. வரும் ஆண்டுகளில் வேறு சில கண்மாயிகளும் துார்வார திட்டமிட்டுள்ளோம் என்றார்.
