UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:44 PM

அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் இவ்வாண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை இல்லாததால் அணைகள், ஆறுகளில் நீர் இருப்பு குறைந்தது. இதனால் பயிர்கள் சாகுபடி பாதித்தது. மேலும் விளைநிலங்கள் காய்ந்து வானம் பார்த்த பூமியானது. கடந்த 20 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
முல்லைப்பெரியாற்றிலும் நீர் வரத்து உள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு பாசனத்தில் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் நெல் நடவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பல ஏக்கரில் வயல்களை உழுது நாற்றங்கால் அமைத்து, நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன் நெல் நடவு செய்த வயல்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
