நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் துறைப் பணியாளர்களுக்கான குறைதீர் முகாம் நடந்தது. இணைப் பதிவாளர் நர்மதா தலைமை வகித்தார்.
முகாமில் 3 மனுக்கள் பெறப்பட்டன. அதில் ஒரு மனு ஓய்வூதிய பயன்கள் கிடைக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.
அதுகுறித்து ஆய்வு செய்து விண்ணப்பதாரருக்கு வாழ்நாள் சான்றிதழ் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் 2 மனுக்களும், சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்ததால் அதுகுறித்தும் ஆவணங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

