ADDED : டிச 26, 2024 05:23 AM
தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில்தேர்வர்கள் இணைந்து வெற்றி பெறலாம்.'என,கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4ல் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வி.ஏ.ஓ., வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்விற்கான அறிவிப்பு 2025 ஏப்ரல் வெளியாக உள்ளது. இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மைய வளாகத்தில் டிச.30ல் துவங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இலவச பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.எனவே தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ, 63792 68661 என்ற அலைபேசியில்தொடர்பு கொள்ளலாம் என்றார்.