ADDED : செப் 27, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
போடி, செப். 28 -
போடி தாலுகா பொட்டல்களம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக குழுவில் வினோபாஜி தெரு பிரபு 42, பொருளாளராக உள்ளார். வரவு செலவு கணக்கு தொடர்பாக பிரபு, அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் 31, தரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்கி கொண்டு கடைகள், டூவீலர்களை சேதப்படுத்தனர்.
தகராறு தொடர்பாக பிரபுவின் தந்தை முத்துசாமி புகாரில்11 பேர் மீதும், ஈஸ்வரி புகாரில் 20 பேர் மீதும் என 31 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். இரு தரப்பையும் சேர்ந்த பாலமுருகன், சின்னன் 48, நாகராஜ் 36, பிரபு, சின்னகருப்பணன் 56, ஆகியே 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
