UPDATED : அக் 13, 2026 05:02 AM
ADDED : அக் 12, 2026 05:59 PM

அ நிறம் | அளவு
தேனி: மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவில் ஹேண்ட்பால் போட்டி தேனி நாடார் சரஸ்வதி பள்ளி மைதானத்தில் நடந்தது.14 வயது பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 17 வயது பிரிவில் முத்துதேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் கண்டமனுார் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் வென்றன. 3 பிரிவுகளிலும் கம்பம் என்.ஏ.எம்., பள்ளி அணி 2ம் இடம் பிடித்தது.
