தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜனவரியில் அதிக மழை

 ஜனவரியில் அதிக மழை

 ஜனவரியில் அதிக மழை


ADDED : பிப் 07, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 478 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வீரபாண்டியில் 132.4 மி.மீ., பதிவானது. மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை அரண்மனைப்புதுார், ஆண்டிபட்டி, போடி, கூடலுார், மஞ்சளாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை, தேக்கடி, உத்தமபாளையம், பெரியாறு அணை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மழைமானிகள் மூலம் அளவிடப்படுகிறது

. மாவட்டத்தில் கடந்த மாதம் 10 நாட்கள் மழை பெய்துள்ளது. மொத்தம் 478 மி.மீ., மழை பதிவானது. கடந்தாண்டு 2025 ஜன.,ல் 248.2 மி.மீ., பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிடும் போது இந்தாண்டு அதிக மழை பெய்துள்ளது. வீரபாண்டியில் 132.4 மி.மீ., ஆண்டிபட்டியில் குறைந்த பட்சமாக 9.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஜன., 2024ல் 1065.6 மி.மீ., மழை பெய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us