/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடியுடன் கனமழை குமுளி மலைப்பாதையில் எச்சரிக்கை
/
இடியுடன் கனமழை குமுளி மலைப்பாதையில் எச்சரிக்கை
ADDED : அக் 10, 2025 12:00 AM
கூடலுார்: இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் குமுளி மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று மதியம் முதல் கூடலுார், லோயர்கேம்ப், குமுளி, கம்பம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்றும் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள குமுளி மலைப் பாதையில் பல ஆபத்தான வளைவுகள் உள்ளது. பல இடங்களில் சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் உள்ளன. மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கனமழை காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். குறிப்பாக டூவீலரில் செல்பவர்கள் மழை பெய்யும்போது மலைப் பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும், என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.