தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஹைவேவிஸ் குவியும் சுற்றுலா பயணிகள்: மேகமலையில் அடிப்படை வசதிகள் தேவை

ஹைவேவிஸ் குவியும் சுற்றுலா பயணிகள்: மேகமலையில் அடிப்படை வசதிகள் தேவை

ஹைவேவிஸ் குவியும் சுற்றுலா பயணிகள்: மேகமலையில் அடிப்படை வசதிகள் தேவை


UPDATED : அக் 30, 2026 05:29 PM

ADDED : அக் 30, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:29 PM ADDED : அக் 30, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னமனூர்: மேகமலை பகுதியில் நிலவும் இதமான வெப்பநிலை, இயற்கை எழில் கொஞ்சும் ஏரி, உலா வரும் வன உயிரினங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக பெய்த மழை குறைந்து விட்டது. மாறாக அதிகாலையில் பனிப் பொழிவு உள்ளது.

தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை பிரதான இடத்தை பெறுகிறது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்ட இப்பகுதியில் ஹைவேவிசில் துவங்கும் அணை தண்ணீர் மணலாறு வரை நீள்கிறது. வாகனத்தில் சென்று கொண்டே அணையில் யானைகள், காட்டுமாடுகள் தண்ணீர் குடிப்பதை ரசிக்கலாம். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் கெடுபிடிகள் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக மதியம் 3 மணிக்குள் திரும்பிவிட கூறுகின்றனர். இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு பாத்ரூம், ஒட்டல் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதது பயணிகளை கவலையடைய வைத்துள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர வனத்துறை முன் வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us