ADDED : மார் 24, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
தேனி:தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வரும் 30 ம் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி வரை நடக்கிறது.
மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி) தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். அப்போது வேட்பாளர்களுடன் ஆதாரவாளர்கள், தொண்டர்களும் வருவர். இதில் டூவிலரில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் , போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் என தேனி போலீசார் எச்சரித்துள்ளனர்.
