தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உயர்கல்வி சிறப்பு முகாம்

உயர்கல்வி சிறப்பு முகாம்

உயர்கல்வி சிறப்பு முகாம்


UPDATED : ஆக 11, 2026 06:16 PM

ADDED : ஆக 11, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 06:16 PM ADDED : ஆக 11, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்த மாணவர்களை கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். சி.இ.ஓ.,முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நேதாஜி, கோட்டூர் அரசு பாலிடெக்னிக் முதல்வர் சரவணக்குமார், திறன் மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் பாஸ்கரன், டி.இ.ஓ.,(இடைநிலைகல்வி) சுருளிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு அரசு, உதவி பெறும் கல்லுாரிகள், ஐ.டி.ஐ.,களில் இருந்து ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி வகுப்பிற்கு சேர்ந்தனர். கல்வி கடன் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் முகாமை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us