/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கந்துாரி விருந்து வழங்குவதற்கு எதிர்ப்பபு ஹிந்து அமைப்பினர் கைது
/
கந்துாரி விருந்து வழங்குவதற்கு எதிர்ப்பபு ஹிந்து அமைப்பினர் கைது
கந்துாரி விருந்து வழங்குவதற்கு எதிர்ப்பபு ஹிந்து அமைப்பினர் கைது
கந்துாரி விருந்து வழங்குவதற்கு எதிர்ப்பபு ஹிந்து அமைப்பினர் கைது
ADDED : செப் 11, 2025 07:09 AM

பெரியகுளம் : பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள தர்ஹாவில் அசைவ விருந்து (கந்துாரி விருந்து) வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர், பா.ஜ., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் 43 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தாமரைக்குளத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நுாற்றாண்டு பழமையான மலைமேல் வெங்கடாசலபதி கோயில் உள்ளது.
இப்பகுதியில் உள்ள தர்ஹாவில் நேற்று கந்தூரி விழா (அசைவ விருந்து) வழங்குவதற்கு இஸ்லாமியர்கள் முடிவு செய்தனர். இதனை அறிந்த ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய அமைப்பாளர் தர்மராஜன் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தாமரைக்குளம் வ.உ.சி., சிலை அருகே கூடினர். அங்கு கண்களை கருப்பு துணியால் மூடிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி தரவில்லை. இதனை தொடர்ந்து அனைவரும் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கேட்டனர். போலீசார் சிலர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதித்தனர். இதனால் அங்கு ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் இணைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் பதட்டம் நிலவியது. போலீசார்கள் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் விஷ்ணுபிரியன், பா.ஜ., மாவட்ட தலைவர் உட்பட 43 பேரை கைது செய்தனர். தர்ஹாவில் சைவ விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.