/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவமனைகளில் தடையில்லா சேவைக்கு யு.பி.எஸ்., ஜெனரேட்டர் வழங்க வேண்டும் பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருக்க உத்தரவு

ADDED : அக் 21, 2025 04:01 AM
கம்பம்: ''வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வழங்கி (UPS) , ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.'' என, பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. புயல் மழையும் பல மாவட்டங்களை புரட்டி போட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அரசு துறைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுவர்.
அவ்வாறு வரும் போதும், சிகிச்சையளிக்கும் போதும், எந்த விதத்திலும் மின் தடை ஏற்படக் கூடாது.
மின் தடையை எதிர்கொள்ள, தடையில்லா மின் வழங்கிகளை (UPS), ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜெனரேட்டர்களில் டீசல் நிரப்பி இயக்கி பார்க்க வேண்டும்.
மின்சாரம் இல்லாமல் இருட்டில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது என்ற தகவல் வெளி வரக் கூடாது என்று பொதுச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாவட்ட இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள தடையில்லா மின் வழங்கி, ஜெனரேட்டர்கள் பற்றிய விபர குறிப்புகளை அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வழங்கிகளை பராமரிப்பு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.