ADDED : மார் 25, 2025 05:04 AM
அ நிறம் | அளவு
போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியின் ஆண்டு விழா பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன்கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மாரிமுத்து, தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
விடுதி காப்பாளர்கள் பெருமாள், ரத்தினவேல் பாண்டியன் வரவேற்றனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
