UPDATED : அக் 13, 2026 04:34 PM
ADDED : அக் 13, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
கம்பம்: கம்பம் 5வது வார்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டி 57.
இவர் இங்குள்ள கள்ளர் மாணவர் விடுதி சமையலராக பணியாற்றினார். இவரது மகன் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்தார். அவரது நினைவு நாளை வீட்டில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், தனது மகனை நினைத்து மனம் வருந்திய பாண்டி, வீட்டில் இருந்த பிரஷர் மாத்திரைகளை அதிகளவு விழுங்கினார். மகள் கிருஷ் வேணி, தந்தையை சிகிச்சைக்கென தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்தார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
