UPDATED : அக் 09, 2026 05:09 PM
ADDED : அக் 09, 2026 05:07 PM
அ நிறம் | அளவு
தேனி: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி துாய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், ‘மாவட்டத்தில் உள்ள ஆதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 38 விடுதிகளில் துாய்மை பணியாளராக ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வந்தோம். சமையலர் பணியிடம் இல்லாத விடுதிகளில் சமையல் பணிகளுக்கு உதவி வந்தோம். குறைந்த ஊதியமாக இருந்தாலும், அரசு விடுதி வேலை என்பதால் பணிபுரிந்தோம். மகளிர் திட்டம் மூலம் எங்களை நியமித்திருந்தனர். இந்நிலையில் எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக சிலரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட உதவிட வேண்டும்.’ என்றிருந்தது.
