/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி கண் முன் கணவர் விபத்தில் பலி
/
மனைவி கண் முன் கணவர் விபத்தில் பலி
ADDED : ஆக 21, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : புள்ளிமான்கோம்பை அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி பெரியகருப்பன் 58.
இவர் தனது மனைவி லோகமணியுடன் 53, ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றார். திரும்பி வரும்போது சண்முகசுந்தரபுரம் அருகே கரிசல்பட்டி விலக்கில் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக பெரிய கருப்பன் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி கண் முன்னே கணவர் பலியானது அப்பகுதியில் இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.