/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவர் பலி
/
மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவர் பலி
ADDED : டிச 14, 2025 06:06 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் 60, இவரது மகன் பாண்டியராஜன் 30, இவருக்கும் தாரணி 19, என்ற பெண்ணிற்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் , நேற்று முன்தினம் ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் மது குடித்து விட்டு ஆடினார். பின்னர் வீட்டில்படுத்து இருமிக் கொண்டே இருந்தார்.
உடல் ஜில்லென்று இருந்துள்ளது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பாண்டியராஜனை பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
தந்தை புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

