தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆமைவேகத்தில் நடைபெறும் நீர்மின் நிலைய சீரமைப்பு பணி

ஆமைவேகத்தில் நடைபெறும் நீர்மின் நிலைய சீரமைப்பு பணி

ஆமைவேகத்தில் நடைபெறும் நீர்மின் நிலைய சீரமைப்பு பணி


UPDATED : நவ 25, 2026 04:52 PM

ADDED : நவ 25, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 04:52 PM ADDED : நவ 25, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: கம்பம் அருகே உள்ள சிறு புனல் நீர் மின் நிலையம் ( மினி பவர் ஹவுஸ் ) மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து ஓராண்டை கடந்தும் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது

எட்டு ஆண்டுகளுக்கு முன் முல்லைப் பெரியாற்றில் லோயர்கேம்ப்பில் துவங்கி 15 இடங்களில் சிறு புனல் நீர் மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 4 இடங்களில் அமைக்கப்பட்டது. இதில்

லோயர் கேம்ப் அருகில் குருவனூத்து பாலம், காஞ்சிமரந்துறை, குள்ளப் கவுண்டன் பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குள்ளப்பகவுண்டன்பட்டியில் பி. வி. 4 ( Periyar vaigai 4 ) எனப்படும் மின் நிலையத்தில் 2.5 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வந்தது.

கடந்த 2025 அக். 17 ல் பெய்த கன மழையில், முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளம், நீர் மின் நிலையத்திற்குள் புகுந்தது. இதில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி அனைத்து இயந்திரங்களும் நீரில் மூழ்கியது. அன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின் வாரிய அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து, மின் நிலையத்திற்குள் இருந்த வெள்ள நீரை வெளியேற்றினார்கள். எலக்ட்ரிக்கல் பேனல்கள் மற்றும் இயந்திரங்களை எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியாளர்களை கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மின் நிலையம் மழை வெள்ள நீரால் பழுதடைந்து ஓராண்டை கடந்து விட்டது. இன்னமும் பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, மின் உற்பத்தியை துவக்க வாரிய அத்தாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us