ADDED : ஏப் 10, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளவும், சணப்பு உள்ளிட்ட நைட்ரஜன் சத்து நிலைப்படுத்தும் பயிர்களை விதைக்குமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆற்றங்கரை, கண்மாய் பாசன பகுதிகளாக உள்ளன. சில பகுதிகள் மானாவரி பாசன பகுதிகளாக உள்ளன.கோடை உழவு பற்றி வேளாண், தோட்டக்கலையினர் கூறியதாவது: கோடை காலத்தில் உழவு செய்வதன் மூலம் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. மண் வளம் கூடும். மேலும் சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி உள்ளிட்டவற்றை பயிரிடலாம். இவை பசுந்தாள் உரங்களாகும். இவ்வாறு செய்வதால் நைட்ரஜன் சத்து நிலை நிறுத்தப்படும். இந்த சத்து அடுத்து சாகுபடி செய்யும் பயிர்கள் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றனர்.