தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இடுக்கி எம்.பி., உண்ணாவிரதம்

இடுக்கி எம்.பி., உண்ணாவிரதம்

இடுக்கி எம்.பி., உண்ணாவிரதம்


ADDED : பிப் 29, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு, : மூணாறு பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் இடுக்கி மாவட்ட குழு தலைமையில் எம்.பி., டீன்குரியாகோஸ் நேற்று இரண்டாம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூணாறு அருகே கடந்த ஒரு மாதத்தில் காட்டு யானை தாக்கி இருவர் இறந்தனர். தவிர புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி கால் நடைகள் அடிக்கடி பலியாகி வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த சிறப்பு படை அமைப்பதில் அரசு அலட்சியம் காட்டி வருவதால் உயிர் பலி ஏற்பட்டு வருவதாகவும், படையப்பா ஆண் காட்டு யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். பிப்.26ல் சுரேஷ்குமாரை கொன்ற யானையை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடு வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் மூணாறில் மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று முன்தினம் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

நேற்று இரண்டாம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. மணி, அகஸ்தி, காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us