/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டியலில் பெயர் விடுபட்டால் ஜன.18 க்குள் விண்ணப்பிக்கலாம் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

ADDED : டிச 15, 2025 06:12 AM
தேனி: ''டிச.,19ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் 2026 ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம்.'' என, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய்நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு பார்வையாளர் தலைமையில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார், பெரியகுளம் சப் கலெக்டர் ரத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தாசில்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிச., 19ல் வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்பட்ட பட்டியலில் வாக்காளர் விபரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். பட்டியலுக்கான உரிமை கோரல்கள், மறுப்புரைகளானது டிச.19 முதல் 2026 ஜன.18 வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர், புதிதாக சேர்க்க வேண்டிய வாக்காளர்கள் படிவம் 6 மூலம் வழங்கலாம் என, சிறப்பு பார்வையாளர் தெரிவித்துள்ளார்.ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து சிறப்பு பார்வையாளர் தலைமையில் அதிகாரிகள் ஆண்டிபட்டி தொகுதி குன்னுார், பெரியகுளம் தொகுதி தேனி அல்லிநகரம் பகுதிகளில் சிறப்பு திருத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.