/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டும் குழியுமான ரோட்டில் நடந்த செல்ல முடியாத நிலை
/
குண்டும் குழியுமான ரோட்டில் நடந்த செல்ல முடியாத நிலை
குண்டும் குழியுமான ரோட்டில் நடந்த செல்ல முடியாத நிலை
குண்டும் குழியுமான ரோட்டில் நடந்த செல்ல முடியாத நிலை
ADDED : ஜன 06, 2024 06:45 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள விரிவாக்க பகுதிகளுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக நடக்க கூட முடியாத நிலையில் உள்ளது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் வடக்கு, மேற்கு, கிழக்கு ரத வீதிகள் பராமரிப்பு செய்து 15 ஆண்டுகளை கடந்து விட்டது. சமீபத்தில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதாக ரோடுகளை குதறி போட்டுள்ளனர். அதே போல போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஊட்டச்சத்து திட்ட அலுவலகம் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கு செல்லும் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது. இதில் நடக்கவே முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. மழை பெய்தால் காட்டுவாரி மழை வெள்ள நீர் இந்த வீதியின் வழியே வருவதால் கற்கள் நிறைந்து கரடு, முரடாக உள்ளது. வாகனங்கள் இன்றி நடந்து செல்ல முடியாத நிலையில் இப்பகுதியில் வசிப்பவர்கள் தவித்து வருகின்றனர். பேருராட்சி நிர்வாகம் இந்த வீதியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.