தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை  மேம்படுத்துங்கள்: கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வு

கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை  மேம்படுத்துங்கள்: கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வு

கும்பக்கரை அருவியில் அடிப்படை வசதிகளை  மேம்படுத்துங்கள்: கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வு


ADDED : ஜூன் 06, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கும்பக்கரை அருவி இடையே ரோப்கார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சில மாதங்களுக்கு முன்பு புதுடில்லி- சென்னை மெட்ரோ நிறுவனம் பொறியியல் துறையினர் ஆய்வு மேற் கொண்டனர்.

கொடைக்கானல் வட்டக்கானலிருந்து 9 கி.மீ., தொலைவில் ரோப்கார் அமைக்கும் திட்டத்தில், வட்டக்கானல்- வெள்ளகெவி ஒரு நிறுத்தமும், வெள்ளகெவி- கும்பக்கரை அருவி ஒரு நிறுத்தமும் கணக்கிடப்பட்டது.

இதற்காக வட்டக்கானல் அருகே டால்பின் நோஸ் ரோட்டில் பொறியியல் துறையினர் கள ஆய்வு செய்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ரோப்கார் திட்டம் அமைய உள்ள நிலையில், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அத்தியாவசியமான வசதிகள் செய்திட வேண்டும்.

அருவியின் மேற்புறம் 300 மீட்டர் தூர நீரோடையிலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குளிக்கும் வசதி உள்ளது. நீரோடை மேற்புறம் 7 அடி முதல் 10 அடி பள்ளத்தில் நீந்தி குளிக்கும் பகுதி உள்ளது. மலையில் அடித்துவரப்பட்ட கற்கள் குவிந்ததால் இங்கு வனத்துறை குளிக்க தடை விதித்துள்ளனர். இதனை சீரமைத்து குளிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரம் கட்டப்பட்ட பேட்டரி கார் நுழைவு வாயிலிருந்து அருவி வரை 400 மீட்டர் தூரம் உள்ளது. அருவிக்கு செல்ல இரு பேட்டரி கார்கள் பயன்பாட்டில் இருந்தன.

ஆனால் மேடான ரோட்டில் பேட்டரி கார் செல்ல திணறுவதால் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள், முதியோர் அருவி பகுதிக்கு செல்ல சிரமம் அடைகின்றனர்.

எனவே சுற்றுலா பயணிகள் சென்று வர வேன் வசதி செய்து தர வேண்டும். கீழ வடகரை ஊராட்சி வாகனங்களுக்கு கட்டணமாக மாதம் ரூ. லட்சக்கணக்கில் வசூல் செய்கிறது.

வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்படுகிறது. இங்கு செயல்பட்ட மூலிகை தோட்டம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்.8ல் வன உயிரின வார விழா நடத்தப்படுகிறது. இதேபோல் கோடை விழா மலர் கண்காட்சி விழா இங்கு நடத்த வேண்டும்.

ரோப்கார் திட்டம் வருவதற்குள், கும்பக்கரை அருவியில் வசதிகள் மேம்படுத்திட சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us