ADDED : செப் 03, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.4–தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
தேனி கம்மவார் சங்க தலைவர் பாண்டிராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாணவர்களுக்கான கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள், வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றத்திற்கான மாணவர்கள் பங்கு உள்ளிட்டவவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கல்லுாரி இணைச்செயலாளர் விஜயன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.
