ADDED : ஜூலை 01, 2026 12:04 AM
கம்பம்: கம்பத்தில் பிள்ளைமார் முதலியார் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா நடந்தது.
ராமலிங்கம்பிள்ளை அறக்கட்டளை தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் காந்தவாசன் வரவேற்றார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 425 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 131 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 78 மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்தை பாராட்டி ரூ. 50 ஆயிரம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் தலைவர் பெரியகுளம் ராஜ்குமார், செயலாளர் சன்னாசி, பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
