தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

 யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

 யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வாகனங்கள் மீது தாக்குதல்


ADDED : ஜன 14, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அவற்றின் நடமாட்டத்தை தினமும் காலை வனத்துறையினர் அலைபேசிகளில் குறுந்தகவல் அனுப்பி எச்சரித்து வருகின்றனர்.

அதன்படி பார்வதி, லெட்சுமி, குருமலை, கன்னிமலை ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாடுவதாக நேற்று எச்சரித்தனர்.

தவிர மூணாறு நகரை ஒட்டி பொறியியல் கல்லூரி அருகே பெரியவாரை எஸ்டேட், டாப் டிவிஷன் செல்லும் ரோட்டில் இரண்டு குழுக்களாக யானைகள் முகாமிட்டன. கிராம்ஸ்லண்ட் புது டிவிஷன் பகுதியில் படையப்பா முகாமிட்டது.

தாக்குதல்: தற்போது படையப்பா ஆண் காட்டு யானை மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித்திரிகிறது.

இது போன்ற சூழலில் ஆக்ரோஷமாக மாறும் படையப்பா வாகனங்களை தாக்குவது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலை மூணாறைச் சேர்ந்த முனியசாமியின் காரின் பின்புற கண்ணாடியை நெற்றிகுடி பகுதியில் வைத்து படையப்பா சேதப்படுத்தியது. முனியசாமி காரில் இருந்து இறங்கி ஓடி உயிர் தப்பினார்.

நேரியமங்கலம் அருகே கரிமணல் பகுதியில் கார், டூவீலர் ஆகியவற்றை வேறொரு ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது. அந்த வழியில் கோலஞ்சேரிக்குச் சென்ற பூப்பாறையைச் சேர்ந்த மோகனனின் கார் சேதப்படுத்தப்பட்டது. காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதே வழியில் டூவீலரில் வந்த வெண்மணியை சேர்ந்த ஜெரி யானையை பார்த்து டூவீலரை ரோட்டில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். டூவீலரை யானை சேதப்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us