தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ செக்போஸ்ட்களில் வாகன சோதனை அதிகரிப்பு கேரளா வியாபாரிகள் வருகை குறைவு

 செக்போஸ்ட்களில் வாகன சோதனை அதிகரிப்பு கேரளா வியாபாரிகள் வருகை குறைவு

 செக்போஸ்ட்களில் வாகன சோதனை அதிகரிப்பு கேரளா வியாபாரிகள் வருகை குறைவு


ADDED : மார் 21, 2026 08:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 08:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: சட்டசபை தேர்தல் காரணமாக தமிழக செக்போஸ்ட்களில் நிலை கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனை அதிகரித்துள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது.

தமிழக, கேரளா பகுதிகளை இணைக்கும் பகுதியாக போடிமெட்டு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளது. கேரளாவில் ஏலம், மிளகு சாகுபடியில் தமிழக, கேரள மக்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் தமிழக பகுதியில் இருந்து கேரள தோட்ட வேலைக்கு தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கு சம்பளம், அங்கு விற்பனை செய்யப்படும் ஏலக்காய்க்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பணம் கொடுத்து செல்கின்றனர்.

தமிழக பகுதியில் பெரிய அளவில் ஏலக்காய் தரம் பிரிக்கும் நிறுவனங்களை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். அவர்கள் நிறுவனங்களுக்கு பணம் கொண்டு வரவும், இங்கிருந்து வாங்கி செல்வதும் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கேரளாவிற்கு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். விற்பனை செய்த பணத்தை வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் போடிமெட்டு, முந்தல், கம்பம் மெட்டு, குமுளி செக்போஸ்ட்களின் நிலை கண்காணிப்பு குழுவினர் துணை ராணுவப் படை, போலீசருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரம், விவசாய பணிகளுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணம் கொண்டு வர முடியாததால் அந்த பணம் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் தமிழகத்திற்கு வரும் வியாபாரிகளின் வருகை குறைந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us